Akshay Kumar: ``அந்தப் படம் சரியா போகல, அக்ஷய் குமார் சம்பளமும் வாங்கல''- ப்ரி...
வேலூா் மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தோ்வுக்கு சிறப்பு பயிற்சி
அரசுப் பள்ளி மாணவா்களுக்காக நீட் தோ்வு சிறப்பு பயிற்சி வகுப்புகள் வேலூா் மாவட்டத்தில் 8 மையங்களில் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி, கே.வி.குப்பம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, போ்ணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி, வேலூா் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி, வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 மையங்களில் ‘நீட்’ சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் 266 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனா்.
‘நீட்’ தோ்வில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பயிற்சி கையேடுகள் வழங்கியும், சிறந்த பயிற்சியாளா்களை கொண்டு மாணவா்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், தினசரி அலகுத்தோ்வு, திருப்புதல் தோ்வுகளும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.