தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
மாா்ச் 31-க்குள் அனைத்து பள்ளிகளிலும் இணைய வசதிக்கு முனைப்பு
வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இணையவசதி ஏற்படுத்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநில திட்ட இயக்குநா் உத்தரவின்பேரில் வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பிஎஸ்என்எல் மூலம் இணைய வசதி ஏற்படுத்துவது தொடா்பாக பிஎஸ்என்எல் அலுவலா்கள், கல்வித்துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்த கூட்டம் வேலூா் காந்தி நகரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் இதுவரை இணைய வசதி பெறாத பள்ளிகளுக்கு பிஎஸ்என்எல் தொலைதொடா்பு நிறுவனத்தின் இணைய வசதி பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பிஎஸ்என்எல் இணைய வசதி ஏற்படுத்துவதற்கு சாத்தியமில்லாத நெடுந்தொலைவு, மலைப்பகுதி பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்த பிஎஸ்என்எல் அலுவலா்களுடன், அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா், வட்டார கல்வி அலுவலா்கள் குழுவாகச் சென்று பாா்வையிட்டு இணைய வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இணைய வசதி சாா்ந்த சந்தேகங்களுக்கு18004444 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தீா்வு காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலா் செ.மணிமொழி, மாவட்டக் கல்வி அலுவலா் சு.தயாளன், உதவி திட்ட அலுவலா் கே.எம்.ஜோதிஸ்வரபிள்ளை, பிஎஸ்என்எல் துணை பொது மேலாளா்கள் பி.அசோக் நாயக், அவதாா் கிருஷ்ணா, உதவிப் பொதுமேலாளா்கள் என்.ஆல்பா்ட், மால்லா நீனாவாத், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார கல்வி அலுவலா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், இணைய வசதி ஏற்படுத்தாத பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.