செய்திகள் :

வேல்முருகனைக் கண்டித்த முதல்வர்; திமுக அரசைப் போட்டுத்தாக்கும் த.வா.க நிர்வாகிகள்; அடுத்து என்ன?

post image

சாதிவாரி கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்குவது போன்றவைத் தொடர்பாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேச முறையிட்டபோது தி.மு.க அமைச்சர்களும் முதல்வர் ஸ்டாலினும் கண்டித்திருக்கிறார்கள்.

இது தமிழக அரசியலைப் பரபரப்பாக்கிய சூழலில், த.வா.க தரப்பு தி.மு.க அரசையும் அமைச்சர் சேகர்பாபுவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சேகர்பாபு vs வேல்முருகன் vs முதல்வர் ஸ்டாலின்
சேகர்பாபு vs வேல்முருகன் vs முதல்வர் ஸ்டாலின்

த.வா.க-வின் இளைஞரணி செயலாளர் புலேந்திரன் முருகானந்தம் வெளியிட்டிருக்கும் மடலில், ``வடவர் ஆதிக்கம், தொடரும் கள்ளச்சாராயம் படுகொலைகள், குறைக்கப்படாத டாஸ்மாக் கடைகள், மாணவர்கள் இளைஞர்கள் கையில் சுலபமாகக் கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள்,

அதன்மூலம் தமிழ்நாடு சந்திக்கும் சமூக சீரழிவுகள், தொடரும் படுகொலைகள், சிவகாசியில் தொடரும் தொடர் பட்டாசுத் தொழிலாளர்களின் உயிர் இழப்புகள், கன்னியாகுமரியில் தொடர்ச்சியாக வெட்டி எடுக்கப்படும் எமது மலைகள், தூத்துக்குடியில் தொடரும் வேதாந்தாவின் அச்சுறுத்தல்கள், தண்ணீர்த் தொட்டில் மலம் கலந்த வேங்கை வயல் கொடுமை,

தென் தமிழகத்தில் தொடரும் சாதிய படுகொலைகள், பச்சைக் குழந்தை முதல் பல்லு போன பாட்டி வரை தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இனப்படுகொலை என ஏராளமாக பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன.

புலேந்திரன் முருகானந்தம்!

அதுமட்டுமல்ல, தமிழகத்தின் விடியலுக்காக தங்கள் உயிர்களைக் கொடையாய் தந்த அப்துல்ரவூப் முத்துக்குமார் செங்கொடி உள்ளிட்ட எமது தியாக சீலர்களுக்கு ஒரு நினைவிடம் கூட எழுப்புவதற்கு இந்த அரசுகள் தயார் இல்லாத அவலநிலை,

தொடர்ச்சியாகக் கேரள எல்லைப் பகுதிகளில் தமிழகத்திற்குள் கொட்டப்படும் கேரள குப்பைக் கழிவுகள், தமிழர்களுக்கு எதிராகவும் தமிழ் மொழிக்கு எதிராகவும் சிதம்பரத்தில் தொடரும் பார்ப்பன தீட்சிதர்களின் அட்டூழியம்,

உழைக்கும் விவசாய மக்களிடம் எந்த அனுமதியும் கோராமல் என்.எல்.சி நிலக்கரி நிறுவனத்திற்காகத் தொடர்ச்சியாக நிலங்களைக் கையகப்படுத்துதல், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய விலையைத் தர மறுத்தல்,

இடம் கொடுத்த மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யாமல் இருத்தல், என்.எல்.சி-யில் பணிபுரியும் தொழிலாளர்கள் விபத்தில் மரணிக்க நேர்ந்தால் அவர்களுக்கு உரிய நிவாரணம் தர மறுத்தல்,

மேகத்தாட்டில் அணை கட்ட துடிக்கின்ற கர்நாடகா அரசின் அடாவடித்தனம், பாலாற்றின் குறுக்கே தொடர்ச்சியாக அணை கட்டிக் கொண்டிருக்கும் ஆந்திர அரசின் அட்டூழியம்,

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யச் செல்லும் தமிழக அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள்,

பரந்தூர் விமான நிலைய பிரச்னை, சிப்காட்டுக்காக விவசாய நிலங்களைக் கபலீகரம் செய்யும் அரசின் அத்துமீறல் என என இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஸ்டாலின்

அதைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. உங்கள் பார்வையில் எங்கள் அண்ணனின் போர்க்குணமும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் போராட்ட களங்களும் அதிகப்பிரசங்கித்தனமாக தெரிகின்றது என்றால் நாங்கள் தொடர்ச்சியாக மக்களுக்ளுக்காகவும் தமிழ்நாட்டின் வாழ்வுரிமையை மீட்கவும் போராடிக் கொண்டே இருப்போம்" என்று உறுதிப்படச் சொல்லியிருந்தனர்.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், "த.வா.க-வின் எந்த கோரிக்கையும் தி.மு.க அரசு பரிசீலிப்பதில்லை என்ற வருத்தம் அதிகரித்துவரும் சூழலில், சட்டமன்றத்தில் வெகுண்டெழுந்து பேசினார் வேல்முருகன்.

வேல்முருகன்

மக்கள் கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை, உரிய மதிப்பும் இல்லாத ஒரு கூட்டணியில் எதற்காகத் தொடரவேண்டும் எனச் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கங்களைக் கொட்டி வருகிறார்கள்.

வேல்முருகனின் அனுமதியோடு முன்னணி நிர்வாகிகளை அரசைக் கண்டிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ராஜினாமா, கூட்டணி முறிவு போன்ற முக்கிய முடிவுகளை வேல்முருகன் எடுப்பார் எனப் பேசப்பட்டாலும் விரைவில் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவுள்ளாராம்” என்றனர்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Fair Delimitation: ``தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால்..'' -கனிமொழி எம்.பி

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்தி... மேலும் பார்க்க

Fair Delimitation: 7 மாநில முதல்வர்களின் அரசியல் உரைகள்; முன்வைத்த முக்கிய கருத்துகள் என்ன?

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்தி... மேலும் பார்க்க

Fair Delimitation: "இது பா.ஜ.க வின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும்"-கேரள முதல்வர் பினராயி விஜயன்

மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர... மேலும் பார்க்க

Fair Delimitation: ``இந்த 5 விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்'' - உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டல... மேலும் பார்க்க

Fair Delimitation: "இரண்டாம்தர குடிமக்களாகிவிடும் அபாயம்" - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர... மேலும் பார்க்க

Fair Delimitation: "சொந்த நாட்டில் அரசியல் அதிகாரத்தை இழக்கும் சூழ்நிலை" - முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்தி... மேலும் பார்க்க