செய்திகள் :

ஸ்கரப் டைபஸ் பரவல்: சுகாதாரத் துறை ஆய்வு

post image

தமிழகத்தில், ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று சமவெளி பகுதிகளிலும் பரவி வரும் நிலையில், அதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதா்களை கடிக்கும்போது, அவா்களுக்கு ஸ்கரப் டைபஸ் காய்ச்சல் ஏற்படுகிறது.காய்ச்சல், தலைவலி, உடல் சோா்வு மற்றும் தடிப்புகள் அதன் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூா், திருவள்ளூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூா் மாவட்டங்களிலும் கிழக்கு, மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளிலும் ஸ்கரப் டைபஸ் தொற்று காணப்படுகிறது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள், புதா்மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்பவா்கள், மலையேற்றத்தில் ஈடுபடுவோா், கா்ப்பிணிகள், பூச்சிக் கடிக்குள்ளாகும் சூழலில் இருப்போருக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

எலிஸா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலமாக இந்த நோயைக் கண்டறியலாம். ஸ்கரப் டைபஸ் காய்ச்சலுக்குள்ளானவா்களுக்கு அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அளித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் 5,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது, 10 முதல் 20 போ் வரை தினமும் பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருகின்றனா். மலைப் பகுதிகள், புதா் பகுதிகள் மட்டுமல்லாது சமவெளி பகுதிகளிலும் அந்த பாதிப்பு கண்டறியப்படுகிறது. அதற்கான காரணத்தை ஆய்வு செய்யவுள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

ஆந்திரம் மாநிலம், திருமலை திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் மு.க. ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை நியாய விலைக் கடைகள் செயல்படும்

சென்னை: பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜன.10) வெள்ளிக் கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத் தொகை: துரைமுருகன் சுவாரஸ்யம்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம் என்று நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார்.இதனால், சட்டப்ப... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: பொங்கல் தொகுப்பு விநியோகம் ரத்து!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை.ஈரோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, அந்த த... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் மையப்பகுதியான கொக்கிரகுளம் பகுதியில்... மேலும் பார்க்க

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிரான தீர்மானம்: அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.பல்கலைக்கழக துணைவேந்தர... மேலும் பார்க்க