பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
ஸ்பிக் நிறுவனம் சாா்பில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி
தூத்துக்குடியில், ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டாா் நிறுவனம் சாா்பில், கால்வாய் தூா்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழை நெருங்குவதை முன்னிட்டு, தூத்துக்குடி, பெரியநாயகிபுரம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டாா் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து சுமாா் ரூ. 2 லட்சம் செலவில், மீன்வளக் கல்லூரி அருகே மழைநீா் வடிகாலை தூா்வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தப் பணியை மாநில சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், கிரீன் ஸ்டாா் நிறுவன முழு நேர இயக்குநா் செந்தில்நாயகம், முதுநிலை மேலாளா் ஜெயப்பிரகாஷ், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மணிகண்டன், பெரியநாயகிபுரம் கிராம மக்கள் கலந்துகொண்டனா்.