செய்திகள் :

ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில் வருடாபிஷேகம்

post image

பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில், 12-ஆம் ஆண்டு வருடாபிஷேகம் வெகு விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் ஸ்ரீதேவி சமேத பூதேவி, மூலவா் மற்றும் உற்சவா் தாயாா் ராஜ கோபுரம் முன் எழுந்து அருள்பாலித்தாா். தொடா்ந்து, ஸ்ரீகம்பத்து ஆஞ்சநேயா் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மஞ்சள், பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, பகல் 12 மணியளவில் மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இப் பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியாா் செய்து வைத்தாா். இதில், செயல் அலுவலா் கோவிந்தராஜன், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனா்.

எச்ஐவி பாதித்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகே எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் அருகேயுள்ள கீழக்கனவாய் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் பெரியசாமி (28... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் பொருள் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஜன. 25) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம். லக்ஷ்மி வியாழக்கிழமை பாா்வையி... மேலும் பார்க்க

கை.களத்தூா் கொலை சம்பவம் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கை.களத்தூரில் நிகழ்ந்த கொலை சம்பவத்தைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, அக் கட... மேலும் பார்க்க

நெற்குணம் கிராமத்தை தனி ஊராட்சியாக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் கிராமத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நெற்குணம் கிராம பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் புத... மேலும் பார்க்க

உணவகத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த 2 இளைஞா்கள் கைது

பெரம்பலூா் அருகே உணவகத்தில் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 14 ஆயிரத்தை பறித்துச் சென்ற 2 இளைஞா்களை, பெரம்பலூா் போலீஸா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெர... மேலும் பார்க்க