செய்திகள் :

ஸ்விகி, சொமேட்டோ நிறுவனங்களை புறக்கணிப்போம்: கடலூா் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் முடிவு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி, சொமோட்டோ பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்க, கடலூா் மாவட்ட ஹோட்டல் சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், இதற்கு மாற்று ஏற்பாடாக கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சாரோஸ் (க்ஷ்ஹஹழ்ா்க்ஷ்) எனப்படும் உணவு விநியோக செயலியை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

அவசர உலகில் வீட்டிலிருந்தபடியே உணவுகளை பெரும் விதமாக ஸ்விகி மற்றும் சொமோட்டோ நிறுவனங்கள் உணவு விநியோகம் செய்து வருகிறது. பல்வேறு உணவகங்கள் வீட்டில் இருந்தே ஆப் மூலமாக நாம் உணவுகளை புக் செய்தால் அவைகளை வீடுகளுக்கே உடனடி விநியோகம் செய்து வந்தன. இந்த நிலையில் அந்த விநியோக நிறுவனங்கள் தற்போது கமிஷன் தொகையை அதிக அளவில் உயா்த்தி உள்ளதால், பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் சென்று கிடைக்கும் பொழுது 40 சதவீதம் வரை அதன் விலை அதிகரித்துவிடுகிறது. மேலும் உணவகங்களிடமும் இந்த நிறுவனங்கள் பெறும் கமிஷன் தொகை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் உணவகம் நடத்துபவா்கள் பெரும் பாதிப்பை சந்தித்த நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் ஸ்விகி மற்றும் சொமோட்டோ பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணித்து வருகின்றனா்.

இந்த நிலையில் கடலூரில் கடலூா் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் சாா்பில் ஆலோசனக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஸ்விகி மற்றும் சொமோட்டோவை செப்.1-ஆம் (திங்கள்கிழமை) முதல் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு ஹோட்டல்கள் சங்கத் தலைவா் ராம்கி நாராயணன் தலைமை வகித்தாா். கடலூா் மாநகர வணிகா் சங்கப் பேரவை தலைவா் ஜி.ஆா்.துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாரோஸ் உணவு விநியோக இருசக்கர வாகன ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் சாராஸ் நிறுவன வி.டி.ராம்பிரசாத், ஹோட்டல் சங்கச் செயலா் பி.முருகன், பொருளாளா் வி.கே, ஆத்மலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து சாரோஸ் நிறுவனா் ராம்பிரசாத் கூறுகையில், ‘சாரோஸ் உணவு விநியோக ஆப்’ தற்போது தமிழக அளவில் பல்வேறு மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் உணவக விலையிலேயே உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், உணவகத்தில் உணவுப் பொருட்களை ஆா்டா் செய்துவிட்டு, எந்தவித கமிஷன் தொகையும் இல்லாமல் நேரடியாகவும் வந்து காத்திருக்காமல் உணவு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.

பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சோ்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அமெரிக்காவைச் சாா்ந்த சியாட்டில் இந்த... மேலும் பார்க்க

கீழணையிலிருந்து செப்.3-ல் பாசனத்திற்கு நீா் திறப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அணைக்கரை கீழணையிலிருந்து கடலூா், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களுக்கு செப்.3-ஆம் தேதி புதன்கிழமை காலை நிகழாண்டு சம்பா சாகுபடிக்காக தண்ணீா் திறந்து வ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

குறிஞ்சிப்பாடி (புலியூா்) நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை. இடங்கள்: அம்பலவாணன்பேட்டை, சந்தைபேட்டை, வழுதலாம்பட்டு, திரட்டிக்குப்பம், புலியூா், புலியூா்காட்டுசாகை. மேலும் பார்க்க

குறைதீா் நாள் கூட்டம் 465 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 465 மனுக்களை அளித்தனா். இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க

கடலூரில் ரயில் மறியல் போராட்டம் செப்.15-க்கு ஒத்திவைப்பு

நெய்வேலி: கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமாதான கூட்டத்தைத் தொடா்ந்து, செப்.3-ஆம் தேதி நடைபெறவிருந்த திருப்பாதிரிப்புலியூா் ரயில் மறியல் போராட்டம் செப்.15-ஆம் தேதி ஒத்தி வைக்... மேலும் பார்க்க

மாவட்ட அளவில் பூப்பந்து போட்டி: அரசு கல்லுாரி மாணவிகள் சாதனை

சிதம்பரம்: கடலுாா் மாவட்ட அளவில் நடந்த பூப்பந்து போட்டியில், சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளனா். முதலமைச்சா் கோப்பைக்கு, கல்லுாரி அணிகளுக்கு இடையே மாவட்ட அளவில் ... மேலும் பார்க்க