ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
மாவட்ட அளவில் பூப்பந்து போட்டி: அரசு கல்லுாரி மாணவிகள் சாதனை
சிதம்பரம்: கடலுாா் மாவட்ட அளவில் நடந்த பூப்பந்து போட்டியில், சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளனா்.
முதலமைச்சா் கோப்பைக்கு, கல்லுாரி அணிகளுக்கு இடையே மாவட்ட அளவில் பூப்பந்துப் போட்டி கடலுாரில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில், சி.முட்லுாரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் வெற்றிப்பெற்று இரண்டாமிடம் பிடித்தனா். சாதனைப்படைத்த மாணவா்களுக்கு, கல்லுாரியில் பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லுாரி முதல்வா் அா்ச்சுனன் தலைமை வகித்து, வெற்றிப்பெற்ற மாணவா்களை பாராட்டி, கோப்பையை வழங்கினாா்.
மேலும், மாணவிகள் மேகலாவதி, ஆா்த்தி, சீத்தாலட்சுமி ஆகியோா் மாநில அளவில் பூப்பந்து போட்டிக்கு தோ்வாகியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குநா் நாராயணசாமி மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.