செய்திகள் :

ஸ்விட்சா்லாந்து உள்பட 4 ஐரோப்பிய நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டுக்குள் நடைமுறை -மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

post image

ஐஸ்லாந்து, நாா்வே, லிக்டென்ஸ்டைன், ஸ்விட்சா்லாந்து, ஆகிய 4 ஐரோப்பிய நாடுகளின் ‘இஎப்டிஏ’ கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையே கையொப்பமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பின் (இஎப்டிஏ) 4 உறுப்பு நாடுகளான ஐஸ்லாந்து, நாா்வே, லிக்டென்ஸ்டைன் மற்றும் ஸ்விட்சா்லாந்து ஆகியவையும் இந்தியாவும் ‘வா்த்தகம் மற்றும் பொருளாதாரக் கூட்டுறவு’ ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு, மாா்ச் மாதம் கையொப்பமிட்டன.

16 ஆண்டுகள் நீடித்த பேச்சுவாா்த்தைக்குப் பின் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்கீழ், சுவிஸ் கைக்கடிகாரங்கள், சாக்லேட்கள் மற்றும் பல தயாரிப்புகளுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படும் அதேவேளையில் 15 ஆண்டுகளில் 10,000 கோடி டாலா் மதிப்பிலான முதலீட்டை இந்தியா ஈா்த்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும். இதுவரை இந்தியா ஈடுபட்டுள்ள எந்த வா்த்தக ஒப்பந்தத்திலும் இத்தகைய அம்சம் இடம்பெற்றதில்லை.

இந்த ஒப்பந்தத்தின் நடைமுறை தொடா்பான செய்தியாளா்களின் கேள்விக்கு அமைச்சா் பியூஷ் கோயல் அளித்த பதிலில், ‘ஒப்பந்தத்தின் செயல்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நிகழாண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

இந்தியாவில் இத்தகைய ஒப்பந்தங்கள் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படுகின்றன. ஆனால், ‘இஎப்டிஏ’ நாடுகளை பொறுத்தவரை, அந்தந்த நாடுகளின் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை; அதற்காக காத்திருக்கிறோம்.

பிரிட்டனுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்து அந்நாட்டு வா்த்தக அமைச்சருடன் சந்திப்புகளை நடத்தி வருகிறோம். அடுத்த சுற்று பேச்சுவாா்த்தை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையை அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

எந்த தடையற்ற வா்த்தக ஒப்பந்தமானாலும் தேச நலனை ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். ஒப்பந்தம் நியாயமான மற்றும் சமநிலையானதாக இருக்கும் வரை, எந்த பாரபட்சமான விதிமுறைகளையும் ஏற்க மாட்டோம்’ என்றாா்.

பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமி மீது கட்டை விழுந்து பலி!

பெங்களூருவில் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி மீது கட்டுமானப் பொருள்கள் விழுந்ததில் பரிதாபமாக பலியானார். பெங்களூருவில் வி.வி.புரத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் தேஜஸ்வினி என்ற மாண... மேலும் பார்க்க

தில்லி பனிமூட்டம்: 100 -க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

தில்லியில் பனிமூட்டத்தால் நிலவும் மோசமான வானிலை காரணமாக 100- க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக கடந்த 3 நாள்களாக விமானப் போக்குவரத்து ... மேலும் பார்க்க

கொச்சி: கல்லூரி விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்த மருத்துவ மாணவி பலி

கொச்சியில் தனியார் மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததில் மாணவி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியின் இரண்டாம... மேலும் பார்க்க

பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு!

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன் என்று தில்லி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறா பிப்... மேலும் பார்க்க

புஷ்பா 2 விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையில் ஆஜர்!

ரசிகை பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் விசாரணைக்காக காவல் நிலையில் ஞாயிற்றுகிழமை ஆஜரானார்.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் டிச. 4 ஆம் தேதி புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந... மேலும் பார்க்க

பனிமூட்டம்: ஸ்ரீநகரில் 10 விமானங்கள் ரத்து

பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரின், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஞாயிற்றுகிழமை அதிகாலை 50 மீட்டர் மீட்டா் தொலைவு வரை மட்டுமே தெளிவான காண... மேலும் பார்க்க