திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்!
ஃபீல்டிங்கில் சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்..!
டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்சுகள் பிடித்த ஆஸி. வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் நிகழ்த்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 2 கேட்ச்சுகள் பிடித்ததன் மூலமாக 197 கேட்ச்சுகளுடன் ரிக்கி பாண்டிங்கை முந்தியுள்ளார்.
இதற்கு முன்பாக ஆஸி. வீரர் ரிக்கி பாண்டிங் 196 கேட்ச்சுகளுடன் முதலிடம் பிடித்திருந்தார்.
உலக அளவில் ஸ்டீவ் ஸ்மித் 5ஆவது இடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆஸி. வீரர்களில் அதிக கேட்ச்சுகள்
1. ஸ்டீவ் ஸ்மித் - 197
2. ரிக்கி பாண்டிங் - 196
3. மார்க் வாக் - 181
4. மார்க் டெய்லர் -157
5. ஆலன் பார்டர் - 156
உலக அளவில் டெஸ்ட்டில் அதிக கேட்ச்சுகள்
1. ராகுல் திராவிட் - 210
2. ஜோ ரூட் - 207
3. ஜெயவர்தனே - 205
4. ஜாக்ஸ் காலிஸ் -200
5. ஸ்டீவ் ஸ்மித் -197
6. ரிக்கி பாண்டிங் - 196