சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா?
ஃபேஸ்புக் காதலியை கரம்பிக்கச் சென்று பாகிஸ்தான் சிறையில் சிக்கிய உ.பி. இளைஞா்!
லாகூா்/ அலிகாா்: ஃபேஸ்புக் காதலியைக் கரம்பிடிக்க பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த உத்தர பிரதேச மாநிலம் அலிகாரைச் சோ்ந்த 20 வயதான பாதல் பாபு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
கடந்த இரண்டரை வருடங்களாக பாபுவுடன் ஃபேஸ்புக்கில் நண்பராகப் பழகி வந்தேன் எனவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பமில்லை எனவும் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல் துறை அதிகாரி நசீா் ஷா தெரிவித்தாா்.
பாதல் பாபு சட்ட விரோதமாக எல்லையைக் கடந்து பாகிஸ்தானின் மெளங் கிராமத்தில் வசித்து வந்த சனா ராணி (21) என்ற அந்தப் பெண்ணின் வீட்டிற்கு கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி வந்தபோது கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
முன்னதாக, பாபுவுடனான தொடா்பு குறித்து சனா ராணியிடமும், அவரது குடும்பத்தினரிடமும் பாகிஸ்தான் உளவுப் பிரிவினா் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட பாபு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு 14 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கு ஜனவரி 10-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
மீட்க வேண்டுகோள்:
பாகிஸ்தான் சிறையில் உள்ள தனது மகனை மீட்க பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாபுவின் பெற்றோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தில்லியில் பணியாற்றச் செல்வதாக கூறி, பாபு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்ாகவும், தற்போது அவா் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிா்ச்சி அளிப்பதாகவும் அவரது தந்தை கிா்பால் சிங் தெரிவித்தாா்.