செய்திகள் :

ஃபேஸ்புக் காதலுக்காக எல்லை தாண்டிய இந்திய வாலிபர்... திருமணம் செய்ய மறுத்த பாகிஸ்தான் பெண்

post image

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காதலுக்காக ஆண்களும், பெண்களும் எல்லை தாண்டுவது வழக்கமாக நடந்து வருகிறது. சில நேரங்களில் அக்காதல் வெற்றிகரமாக அமைந்து விடுகிறது. சில நேரங்களில் காதலன் அல்லது காதலிக்காக சட்டவிரோதமாக எல்லை தாண்டுபவர்கள் போலீஸில் சிக்கிக்கொள்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாதல் பாபு(30). பாபுவுக்கு பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த சேர்ந்த சனா ராணி(21) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து பேஸ்புக் மற்றும் போன் மூலம் உரையாடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து தனது காதலியை நேரில் பார்க்க முடிவு செய்த பாபு சட்டவிரோதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டார். அவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பிற்குள் நுழைந்தார். அங்குள்ள மாண்டி பஹுதின் மாவட்டத்தில் பேஸ்புக் காதலி வசிக்கும் கிராமத்திற்கே சென்றுவிட்டார்.

பாதல் பாபு

அவர் பேஸ்புக் காதலி ராணியின் கிராமத்தில் சுற்றிக்கொண்டிருந்தபோது அவரை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் கைது செய்தவுடன் பேஸ்புக் மூலம் பெண் அறிமுகம் ஏற்பட்டதையும், அவரை சந்தித்த வந்ததாகவும் தெரிவித்தார். உடனே போலீஸார் அவர் சொன்ன சனா ராணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து பேசினர். இதில் தனக்கு பாபு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேஸ்புக் நண்பர் என்றும், அதேசமயம் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். இதனால் பாபு அதிர்ச்சியடைந்துள்ளார். காதலியை திருமணம் செய்யலாம் என்று நினைத்த பாபுவிற்கு இது அதிர்ச்சியாக அமைந்தது.

பாகிஸ்தானில் காதலி சனா ராணியை பாபு சந்தித்தாரா என்று போலீஸ் அதிகாரி நாசிர் ஷாவிடம் கேட்டதற்கு, அதனை பாபு உறுதிபடுத்தவில்லை என்றார். சனா ராணி குடும்பத்தினரின் நெருக்கடிக்கு பயந்து போலீஸில் வாக்குமூலத்தை மாற்றி கூறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸார் சனா ராணியிடமும், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். போதிய ஆவணங்கள் இல்லாமல் பாகிஸ்தானுக்குள் நுழைந்ததால் பாபுவை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்த கட்ட விசாரணை வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. பாபு இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று தெரிகிறது. இதற்கு முன்பு இந்தியாவை சேர்ந்த அஞ்சு என்ற பெண் சோசியல் மீடியா காதலனை தேடி பாகிஸ்தான் சென்றார். அவர் அங்கு முஸ்லிம் மதத்திற்கு மாறி தனது காதலனை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார். அவர் பாகிஸ்தானில் தனது பெயரில் இருந்த சொத்துக்களை விற்பனை செய்துவிட்டு தனது நான்கு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு இந்தியாவிற்கு வந்துவிட்டார். இந்தியாவில் தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். இதே போன்று பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா ஜிவானி(19) என்ற பெண் இந்தியாவை சேர்ந்த முலாயம் சிங் என்பவரை ஆன்லைன் மூலம் காதலித்தார். அவர் கடந்த ஆண்டு நேபாளத்தில் தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். ஆன்லைன் மட்டுமல்லாது பெற்றோர்களாக பார்த்தும் இது போன்ற திருமணங்களை நடத்தி வைக்கின்றனர்.

Assam: காண்டாமிருகத்தைக் காணச் சென்றபோது விபரீதம்; வீடியோ வைரலானதால் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் காண்டாமிருகம் உட்பட ஏராளமான வனவிலங்குகள் இருக்கின்றன. இங்குத் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பாதுகாப்பான ஜீப்க... மேலும் பார்க்க

Prashant Kishor: கிச்சன், படுக்கை, ஏ.சி-யுடன் கூடிய சொகுசு வேன்; பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரத சர்ச்சை!

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இப்போது பீகாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பீகாரில் கடந்த மாதம் 13-ம் தேதி அரசு பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் முறைகேடு நடந்ததாக... மேலும் பார்க்க

"வழி தவறிய எருமை எந்த மாநிலத்துக்குச் சொந்தம்?" - கர்நாடகா, ஆந்திர எல்லையில் பதற்றம்; பின்னணி என்ன?

கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையில் இருக்கும் கிராமங்கள் பொம்மநஹால் மற்றும் மெதெஹல். இதில் மொம்மநஹால் கிராமம் கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்திற்குள் இருக்கிறது. இந்த இரண்டு கிராமத்திற்கு இடையே ஒரு ... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: DMK அமைச்சர் வீட்டில் ரெய்டு `டு' மோடி காஸ்ட்லி கிஃப்ட்; இந்த வார கேள்விகள்!

திமுக அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு, அமெரிக்க அதிபரின் மனைவிக்கு பிரதமர் மோடி இந்தியா சார்பில் அளித்த விலையுயர்ந்த வைரம், டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை என இந்த வாரத்தில் பல்வேறு முக்கி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: வேகத்தடை மீட்டுக்கொடுத்த உயிர்? - நடந்தது என்ன?

இறந்ததாக அறிவிக்கப்பட்டவர்கள் சிலநேரங்களில் உயிரோடு எழுவதுண்டு. மகாராஷ்டிராவில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மாவட்டம் கசபா என்ற இடத்தை சேர்ந்தவர் பாண்டு... மேலும் பார்க்க

`எனக்கு அரசியல் பின்புலமா... நீதித் துறையும், அரசியலும் வேறுவேறுதானே?" - யூடியூபர் இர்ஃபான்

சோசியல் மீடியா பிரபலமான யூடியூபர் இர்ஃபான் சர்ச்சைக்குரிய வீடியோக்களை தனது யூ-டியூப் சேனலில் வெளியிடுவதும், பின்னர் சட்டரீதியிலான குற்றச்சாட்டுகள் எழ அதை நீக்குவதும், இதை தமிழக அரசு கண்டிப்பதுபோல கண்ட... மேலும் பார்க்க