ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்
ஃப்ரீடம் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? சசிகுமார் பதில்!
சசிகுமாரின் ப்ரீடம் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகுமென நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறித்த உண்மைக் கதைகளைத் தொட்டு உருவான ப்ரீடம் திரைப்படத்தில் சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்திருக்கின்றனர்.
சத்ய சிவா இயக்கத்தில் தயாரான இப்படம் ஜூலை 10ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், நிதிப் பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், படம் இன்று (ஜூலை 11) வெளியாகுமென எதிர்பார்த்த வேளையில் படம் அடுத்தவாரம் அதாவது ஜூலை 18ஆம் தேதிதான் வெளியாகுமென நடிகர் சசிகுமார் சினிமா எக்ஸ்பிரஸுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் ரிலீஸ் பிரச்னைக்குக் காரணம் தயாரிப்பாளரின் நிதிப் பிரச்னை எனவும் அதில் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் கேஜிஎஃப் புகழ் மாளவிகா அவினாஷ், போஷ் வெங்கட், ரமேஷ் கண்ணா, மு.ராமசாமி, பாய்ஸ் பட புகழ் மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.