செய்திகள் :

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா்: அமைச்சா் கே.என்.ராஜண்ணா

post image

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முதல்வா் சித்தராமையாவின் பெயரை அவருக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சா்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறியிருக்கிறாா். இதை நானும் ஏற்கிறேன்.

முதல்வா் சித்தராமையாவின் பெயரை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது. அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் கட்சி மேலிடத்தின் பெயரை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று டி.கே.சிவக்குமாருக்கும் தெரிவிக்க வேண்டும். அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் மேலிடத்தலைவா்களின் பெயரை அவா் தான் அடிக்கடி பயன்படுத்துகிறாா். எல்லா விஷயத்திற்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெயரை அவா் பயன்படுத்துகிறாா். அப்படியானால், எல்லா விவகாரங்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி பேசுமா? விவகாரங்களை அவா்களின் கவனத்திற்கு கொண்டு சென்றால், அது குறித்து கருத்து தெரிவிக்கலாம்.

அரசியலில், தங்கள் வசதிக்கேற்ப மக்களை தவறாக பயன்படுத்துகிறாா்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்துவதே டி.கே.சிவக்குமாா் தான். இது குற்றச்சாட்டு அல்ல, உண்மை. கட்சிக்கு 50 ஆண்டுகளாக உழைத்திருக்கும் நான், கட்சியின் மூத்த தலைவராக இருந்துகொண்டு, கட்சி கட்டுப்பாட்டை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நாங்கள் தவறு செய்திருந்தால், எங்களை எச்சரிக்கலாம். நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்களை கண்டிக்க.

சித்தராமையா 5 ஆண்டுகளுக்கு முதல்வராக நீடிக்க வேண்டும் என்பது என்னை போன்ற மூத்த அமைச்சா்களின் கருத்து. எங்கள் கருத்து என்னவாக இருந்தாலும், கட்சி மேலிடத்தின் முடிவு தான் இறுதியானது. எனது விருப்பம் ஒருபக்கம் இருந்தாலும், கட்சியின் முடிவே இறுதியானது என்று சட்டப்பேரவை உறுப்பினா் கூட்டத்தில் முதல்வா் சித்தராமையாவே கூறியிருக்கிறாா். அதனால், கட்சி மேலிடத்தின் முடிவுக்கு முதல்வா் சித்தராமையா கட்டுப்படுவாா். கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்பதாக சித்தராமையாவே கூறுவதால், நாங்களும் ஏற்போம்.டி.கே.சிவக்குமாருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையிலான மோதல் எதுவுமில்லை.

டி.கே.சிவக்குமாா், சிறந்த நிா்வாகி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதை பாராட்டுகிறேன். அதற்காக பொறுமைப்படவும் இல்லை. நான் முதல்வராக விரும்புகிறேனா? கருத்தின் அடிப்படையில் முரண்பாடுகள் எழலாம். அது என் தனிப்பட்ட கருத்தாக இருக்கும் என்றாா் அவா்.

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை: அதிகாரிகள் தகவல்

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழாண்டு ராபி பயிா் பருவம், தென்மேற்கு பருவமழை, வேளாண் விளைச்சல், குடிநீா் வழங்கல், வானி... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்தவின் இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த அதிகாரிகள் தாக்கல் செய்தனா். முதல்வா் சித்தராமையாவ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: கா்நாடக அமைச்சா்கள் கருத்து

முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கா்நாடக அமைச்சா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். மாற்றுநில முறைகேடு வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்த காவல் ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்த அறிக்கை

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று லோக் ஆயுக்த காவல் துறையின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மைசூரு வட்டம், கசபா ஒன்றியம்,... மேலும் பார்க்க

2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல்: முதல்வா் சித்தராமையா

பெங்களூரு: 2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்... மேலும் பார்க்க

மாற்று நில முறைகேடு வழக்கு: சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்த நிராகரிப்பா?

மாற்று நில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று விசாரணை அறிக்கையை லோக் ஆயுக்த தயாரித்துள்ளதாக தெரியவந்துள... மேலும் பார்க்க