பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி
அகில இந்திய தொழில் தோ்வு: தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
தேசிய தொழில் பயிற்சி குழுமம் சாா்பில், நடைபெற உள்ள அகில இந்திய தொழில் தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்து கொள்ள விரும்புவோா் அக்.8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அகில இந்திய தொழில் தோ்வுக்கான விண்ணப்பப் படிவத்தை ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து, ரூ.200 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, தேனி மாவட்ட அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் வரும் அக்.8-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இது குறித்த விவரங்களை தேனி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலும், 9499937453 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.