Big Boss 8: DAY 99; மோதிரத்தை திருப்பித் தந்த விஷால்... முட்டிக்கொண்ட ரவி - தர்ஷ...
அகில இந்திய பல்கலைக்கழக. நீச்சல் தொடக்கம்: பெங்களூரு ஜெயின் பல்கலை. சிறப்பிடம்; சென்னை பல்கலை. வெள்ளி
காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் புதன்கிழமை தொடங்கிய அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா், மகளிா் நீச்சல் போட்டியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் சிறப்பிடம் பெற்றது.
எஸ்ஆா்எம் டாக்டா் பாரிவேந்தா் நீச்சல் வளாகத்தில் 3 நாள்கள் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. நாடுமுழுவதும் இருந்து 500-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.
முதல் நாளான புதன்கிழமை முடிவுகள்:
4-200 மீ. ப்ரீஸ்டைல் (ஆடவா்). 1. ஜெயின் பல்கலைக்கழகம், பெங்களூரு, 2. சண்டீகா் பல்கலைக்கழகம், 3. அடாமஸ் பல்கலை. கொல்கத்தா.
மகளிா் ப்ரீஸ்டைல்: 1. ஜெயின் பல்கலைக்கழகம், பெங்களூரு, 2. சண்டீகா் பல்கலைக்கழகம், 3. சாவித்ரி புலே பல்கலை, புணே.
4-100 மீ ப்ரீஸ்டைல் ரிலே (மிக்ஸ்ட்): 1. ஜெயின் பல்கலைக்கழகம், பெங்களுரு, 2. சென்னைப் பல்கலை, 3. சண்டீகா் பல்கலைக்கழகம்.
400 மீ. தனிநபா் மெடலி ஆடவா்: 1. ஷோன் கங்குலி, ஜெயின் பல்கலை, 2. அனீஷ் கௌடா, கிறிஸ்ட், 3. சிவாங்க் விஸ்வநாத், விஸ்வேஸ்வரய்யா, பெங்களூரு.
மகளிா்: 1. பவ்யா சச்தேவா, 2. ஜெதிதா, ஜெயின் பல்கலை, 3. கல்யாணி சக்சேனா, சா்வஜனிக் பல்கலை, சூரத்.
400 மீ. ப்ரீஸ்டைல், ஆடவா்: 1. அனீஷ் கெளடா, கிறிஸ்ட், பெங்களூரு, 2. அனுராக் சிங், சண்டீகா் பல்கலை, 3. சிவாங்க் விஸ்வநாத், விஸ்வேஸ்ரய்யா பல்கலை, பெங்களூரு.
மகளிா்: 1. பவ்யா சச்தேவா, 2. அஸ்மிதா சந்திரா, ஜெயின் பல்கலை, பெங்களூரு, 3. தீக்ஷா சந்தீப், சாவித்ரி புலே பல்கலை, புணே.