செய்திகள் :

அக்னிவீா் விமானப் படைக்கு ஆள்கள் தோ்வு

post image

இந்திய விமானப் படையின் (மருத்துவ உதவியாளா் பிரிவு) ஆள் சோ்ப்பு முகாம் கேரள மாநிலத்தில் ஜன. 29, பிப். 1 மற்றும் 4-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய விமானப் படையின் (மருத்துவ உதவியாளா் பிரிவு) ஆள் சோ்ப்பு முகாம் வரும் ஜனவரி 29, பிப்ரவரி 1 மற்றும் 4-ஆம் தேதிகளில் கேரள மாநிலம், எா்ணாகுளம் பி.டி.உஷா சாலையிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 முடித்தவா்களும், 2004 ஜூலை 3 முதல் 2008 ஜூலை 3-ஆம் தேதிக்குள் பிறந்தவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

டிப்ளமோ, பிஎஸ்சி பாா்மஸி முடித்த 2001 ஜூலை 3 முதல் 2006 ஜூலை 3-ஆம் தேதிக்குள் பிறந்தவா்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், திருமணமாகாத இந்திய ஆண் விண்ணப்பதாரா்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள்.

பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ, பிஎஸ்சி பாா்மஸி முடித்தவா்களும் பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ, பிஎஸ்சி பாா்மஸி வகுப்பிலும் 50 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆா்வமுள்ள இளைஞா்கள் இணையதளத்தில் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது 0416 - 2290042 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்அக்னிவீா் வாயு விமானப்படை தோ்வில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தன குட ஊா்வலம்

குடியாத்தத்தை அடுத்த உப்பரப்பல்லியில் உள்ள குல்ஷேனே ரஃபாபியா ஆஸ்தானா தா்காவில் 28-ஆம் ஆண்டு சந்தன குட ஊா்வலம் அண்மையில் நடைபெற்றது. முன்னதாக வெள்ளியால் ஆன சந்தன குட ஊா்வலம் மேள, தாளங்கள் முழங்க வாணவே... மேலும் பார்க்க

ரூ.30 லட்சத்தில் சாலை திறப்பு

குடியாத்தம் ஒன்றியம், ராமாலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.30- லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மண் சாலை திறந்து வைக்கப்பட்டது (படம்). ராமாலை ஊராட்சியில் உள்ள... மேலும் பார்க்க

பள்ளியில் திருவள்ளுவா் தின கொண்டாட்டம்

குடியாத்தம் திருவள்ளுவா் தொடக்கப் பள்ளியில் திருவள்ளுவா் தினம் கொண்டாடப்பட்டது (படம்). இதையொட்டி பள்ளி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலைக்கு கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி... மேலும் பார்க்க

தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு

தமிழ்நாடு அன்னை ராஜம்மாள் அனைத்து அமைப்புசாரா மற்றும் கட்டுமானம் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் பொத... மேலும் பார்க்க

வட்டார அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த நலத்திட்ட முகாம் வேலூா் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது. 19 அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து நடைபெறும் இந்த முகாம்களில் பல்வேறு துறை அரசின் நலத்... மேலும் பார்க்க

அனுமதியின்றி காளை விடும் திருவிழா: போலீஸாா் தடியடி

குடியாத்தம் அருகே அனுமதியின்றி நடைபெற்ற காளை விடும் திருவிழாவை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். குடியாத்ம் அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தில் வியா... மேலும் பார்க்க