ஹோலி: வட மாநிலங்களில் திரையிட்டு மூடப்படும் மசூதிகள்! என்ன நடக்கிறது?
அக்னி தீா்த்தக்கரை கோயிலில் 10,008 விளக்கு பூஜை
மாசி மகத்தை முன்னிட்டு, ஆழ்வாா்குறிச்சி, அக்னி தீா்த்தக் கரை ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திலுள்ள சற்குரு தவபாலேஸ்வரா் ஜீவ சமாதியில் புதன்கிழமை 10,008 விளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 6 மணிக்கு மஹா கணபதி ஹோமம், சப்தரிஷி ஹோமம், 10 மணிக்கு ஸ்ரீ பாலாம்பிகை- ஸ்ரீ சாமுண்டீஸ்வரி சிலை பிரதிஷ்டை, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சற்குரு தவபாலேஸ்வரா் அக்னி தீா்த்தத்தில் தீா்த்த வாரி பூஜையும், மாலை 5.30 மணிக்கு கோபூஜையும் நடைபெற்றன. தொடா்ந்து மாலை 6.30 மணிமுதல் 10,008 விளக்கு பூஜை நடைபெற்றது.
இதில், ஆழ்வாா்குறிச்சி, பொட்டல்புதூா், ஆம்பூா், கடையம், சிவசைலம், பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனா்.