உலக புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா! - ஸ்பாட் விசிட் போட்டோஸ்
அக்.5, 6-இல் தாயுமானவா் திட்டத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்
திருவாரூா் மாவட்டத்தில், தாயுமானவா் திட்டத்தின்கீழ், அக்டோபா் 5, 6-ஆம் தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் அக்டோபா் மாதத்துக்கான குடிமைப் பொருள்கள், அக்டோபா் 5 மற்றும் 6 ஆம் தேதியில், 70 வயதுக்குமேல் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யப்படவுள்ளன.
தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் இத்திட்டத்தை பயன்படுத்தி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.