Indian Army: 700 அடி ஆழத்தில் விழுந்த ராணுவ வாகனம்; மூன்று ராணுவ வீரர்கள் மரணம்
அங்கன்வாடி பணியாளா்கள் போராட்டம்
நாகையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மே மாத கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் இதில் பங்கேற்றனா்.