செய்திகள் :

'அசிம் முனீர் ஒரு கோட் சூட் அணிந்த ஒசாமா பின்லேடன்!' - முன்னாள் அமெரிக்க அரசு அதிகாரி சாடல்

post image

'எங்களது இருப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால், பாதி உலகையே அழித்துவிடுவோம்' என்கிற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின்.

அவர், "ட்ரம்ப் ஒரு பிசினஸ்மேன். அதனால், அவருக்கு குதிரைப் பேரம் பழகியிருக்கும்.

தவறான அமைதி ஒப்பந்தம் போரைத் தொடங்கும் என்பது அவருக்கு புரியவில்லை. அவருக்கு நோபல் பரிசு வெல்ல வேண்டும் என்கிற குறிக்கோள் இருக்கிறது.

அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு அசிம் முனீர் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது.

அசிம் முனீர்
அசிம் முனீர்

ஒசாமா பின்லேடன்...

அசிம் முனீரைப் பார்க்கும்போது, ஒசாமா பின்லேடன் கோட் சூட் அணிந்திருப்பதுப்போலத் தெரிகிறது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் அவர்களது கருத்தியலையோ, பிரதிநிதித்துவப்படுத்தலையோ மாற்றப்போவதில்லை.

பாகிஸ்தான் பாதி உலகை அணு ஆயுதங்களைக் கொண்டு பயமுறுத்தும்போதே, அது ஒரு முறையான நாட்டிற்கான உரிமையை இழந்துவிட்டது என்பது தெரிகிறது.

அமெரிக்கா பிற கொள்கைகளைக் கையிலெடுக்கும் நேரம் இது. அமெரிக்கா பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதன் அணு ஆயுதத்தைப் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையென்றால், அது பயங்கரமான விளைவுகளைக் கொடுக்கும்" என்று கூறியுள்ளார்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு!

தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக இன்றும் காலை ம... மேலும் பார்க்க

"அப்பாவி மக்கள்மீது பழிபோடுவதா..." - 207 அரசுப் பள்ளிகள் மூடலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கிறது.5 வயது நிரம்பிய குழந்தைகளின்... மேலும் பார்க்க

``என் வீட்டை இப்படிச் சுற்றி வளைப்பது எப்படி ஜனநாயகமாகும்?" - தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தை நடத... மேலும் பார்க்க