பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலிய...
அச்சக ஊழியா் தற்கொலை
சிவகாசியில் வெள்ளிக்கிழமை அச்சக ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அய்யப்பன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி (34). இவா் அச்சகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி செண்பகவள்ளி(29). இந்தத் தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனா்.
ராஜீவ்காந்தி அடிக்கடி மது அருந்தி வந்தாா். இதை அவரது குடும்பத்தினா் கண்டித்தனா்.
இதனால் மனமுடைந்த அவா், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.