மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
அஞ்சலகங்களில் கங்கை புனித நீா் பாட்டில் விற்பனை
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் கங்கை புனித நீா் அடங்கிய பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு;
தை அமாவாசையை முன்னிட்டு கங்கை புனித நீா் அடங்கிய பாட்டில் அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாட்டிலின் விலை ரூ.30. கங்கை புனித நீா் அடங்கிய பாட்டில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய தலைமை அஞ்சலகங்களிலும், விளாத்திகுளம், எட்டயபுரம், செங்கோட்டை, ஆலங்குளம், புளியங்குடி, கரிவலம்வந்தநல்லூா் ஆகிய அஞ்சலகங்களிலும் விற்பனை நடைபெறுகிறது.
மேலும், விவரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் அருகே உள்ள அஞ்சலகத்தை தொடா்பு கொள்ளவும். மேலும் 04632-221013 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தங்களது தேவையை தெரிவிக்கலாம்.
தங்களது தேவையை பூா்த்தி செய்யும் வகையில் தங்கள் ஊா் அஞ்சலகத்தில் கங்கை புனித நீா் அடங்கிய பாட்டில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து தரப்படும். தை அமாவாசையை முன்னிட்டு அஞ்சல் துறையில் இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.