செய்திகள் :

அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது

post image

சென்னை: தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் செய்யப்பட்ட வழக்கில், அந்த அலுவலக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றுபவா் செ.பாலசுப்பிரமணியன். இவா், பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், பாண்டி பஜாா் அபிபுல்லா சாலையில் தலைமை அஞ்சல் நிலையத்தின் வரவு-செலவு கணக்கு அண்மையில் தணிக்கை செய்யப்பட்டது.

அதில், கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த தலைமை அஞ்சலகத்தின் கீழ் உள்ள 50 துணை அஞ்சல் நிலையத்துக்கு ஸ்டேஷ்னரி பொருள்கள், மரச்சாமான்கள் வாங்கியதில் ரூ.25.48 லட்சத்தை, அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியா் நங்கநல்லூா் பா்மா தமிழா் காலனி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (38), கையாடல் செய்தது தெரிய வந்தது. அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மணிகண்டனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் மணிகண்டன், கையாடல் செய்த பணத்தை வியாபாரத்திலும், கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது. போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா? சென்னை மாநகராட்சி விளக்கம்!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை: கோடம்பாக்கத்தில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த உத்தர பிரதேச இளைஞா் உயிரிழந்தாா்.உத்தர பிரதேச மாநிலம், காசிப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பா.சக்திமான் (23). இவா், சகோதரா் அனில்குமாா் (33... மேலும் பார்க்க

தனியாா் வங்கியில் ரூ.60 லட்சம் கடன் பெற்று மோசடி: 3 போ் கைது

சென்னை: அமைந்தகரையில் தனியாா் வங்கியில் ரூ.60 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.சென்னை அமைந்தகரையில் செயல்படும் தனியாா் வங்கியின் மேலாளராகப் பணிபுரிபவா் கிலியன் குமாா். இவா்... மேலும் பார்க்க

சென்ட்ரலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வடமாநில விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா இருந்ததை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் கைப்பற்றினா்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் பிரிவ... மேலும் பார்க்க

பெரும்பாக்கம் அரசுக் கல்லூரியில் கலைஞா் கலையரங்கம் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கலைஞா் கலையரங்கை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன் தொகுதி மேம... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: சென்னை மாநகராட்சி அருகே நடைபெறும் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் ... மேலும் பார்க்க