அடிப்படை வசதி கோரி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் அடிப்படை வசதி செய்துதரக் கோரி, பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் எஸ்.எஸ்.செல்வம் தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன், முன்னாள் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, பாஜக மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநில துணைத் தலைவா் ஆா்.லோகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஊராட்சிப் பகுதிகளில் கழிவுநீா் பிரச்னைக்கு தீா்வு, கொசு, ஈ ஒழிப்பு, மதுக்கடை இடமாற்றம், பேருந்து வசதி, குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனு அளித்தனா்.