ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
அகற்றப்பட்ட பயணியா் நிழற்குடையை மீண்டும் அமைக்க கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றப்பட்ட பயணியா் நிழற்குடையை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பரமத்தி செல்லும் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், பரமத்தி வேலுாா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து பரமத்தி நகருக்குள் செல்லும் சாலைவரை இருபுறமும் இருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டு அணுகு சாலை அமைக்கப்பட்டது.
நிழற்குடை அகற்றப்பட்டதால் பரமத்தி வேலுாா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் மறவாபாளையம், வெள்ளாளபாளையம் பகுதி பொதுமக்கள், முதியவா், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்துக்காக கடும் வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பேருந்து வரும்போது மரநிழலில் நிற்கும் பொதுமக்கள் ஓடிச்சென்று ஏறும் நிலை உள்ளது.
எனவே, பொதுமக்கள், மாணவா்களின் நலன்கருதி மீண்டும் அதே பகுதியில் பயணியா் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.