செய்திகள் :

'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்..!

post image

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருந்தது. ஆனால் சமீபகாலமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை கண்டிக்கத்தக்கது.

வானதி சீனிவாசன்

மாநில அரசு  என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. கைது செய்யப்பட்ட நபர் திமுக பிரமுகர். துணை முதலமைச்சரை சந்தித்து புகைப்படம் எடுக்குமளவுக்கு செல்வாக்கு உள்ளவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும். பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் வெளியில் தெரிய கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து அதுகுறித்த தகவல்களை கசியவிட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி புகார் அளிக்க முன் வருவார்கள்.

தவெக தலைவர் விஜய்

நடிகர் விஜய் வெளியில் வந்து மக்களோடு களத்தில் இருந்து அரசியல் செய்தால் தான் அது அரசியல். எந்த நிலையில் இருந்தாலும் மக்களுடன் நிற்கிறோமா என்பது தான் அரசியல். மக்களோடு நிற்காதவர்களுக்கு மக்கள் எப்போதும் முக்கியமான இடத்தை கொடுக்க மாட்டார்கள்.

சட்டமன்ற உறுப்பினர் நிதியில் திட்டம் கொண்டு வரும்போது, அதை மாநகராட்சி கவுன்சிலர்கள் தடுக்கிறார்கள். இதற்கு மாநகராட்சி அதிகாரிகளும் துணை போகிறார்கள். இதைப்பற்றி மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.” என்றார்.

ஜெயலலிதா

முன்னதாக அந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகி ஒருவர் வானதி சீனிவாசனை, “அடுத்த ஜெயலலிதா” என்று புகழ்ந்தார். செய்தியாளர்கள் அதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு வானதி, “ஆளை விடு சாமி”  என்று கும்பிடு போட்டு சென்றார்.

Manmohan Singh : 'வரலாறு உங்களுக்காக கர்ஜிக்கும்' - மெளன மொழி பேசியவரின் முழு வரலாறு!

அந்த இரு சம்பவங்கள்!1999 நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயம் அது. தெற்கு டெல்லியில் மன்மோகன் சிங் போட்டியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ்க்காரர்கள் களத்தில் குதித்து தீவிரமாக வேலைப் ப... மேலும் பார்க்க

Manmohan Singh: `BMW வேண்டாமே'- மாருதி 800 மீதான மன்மோகன் சிங்-ன் காதல்; பகிரும் முன்னாள் பாதுகாவலர்

நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். இவரைப் பற்றிய நினைவுகளை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய உத்தரப்பிரதேச அமைச்சரும், முன்பு மன்மோகன் சி... மேலும் பார்க்க

Annamalai: 'சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டு போராட்டம்' - அண்ணாமலை நகர்வுகள் கைகொடுக்குமா?

சமீபத்தில் சென்னை, அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தி.மு.க-வை சேர்ந்தவர் என பா.ஜ.க குற்றம்சாட்டுகிறது. ம... மேலும் பார்க்க

Manmohan Singh: மோடியின் பணமதிப்பிழப்பும், மன்மோகன் சிங் சொன்னதைப் போலவே சரிந்த GDP-ம்!

மத்தியில் 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த மூன்றாவது ஆண்டில் 2016 நவம்பர் 8-ம் தேதி, `இனி ரூ. 500, ரூ. 1000' ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிர்ச்சியைத் தந்தார் பிரதமர் மோடி. ஒரே நாளில் மொத்த எளிய மக்கள... மேலும் பார்க்க

ஏமனை தாக்கிய இஸ்ரேல்; நூலிழையில் தப்பித்த WHO தலைவர் - தாக்குதல் குறித்து என்ன சொல்கிறார் அவர்?!

பாலஸ்தீனம், லெபனான், இரான்... தற்போது ஏமன் என இஸ்ரேலின் பகை மற்றும் தாக்குதல் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இஸ்ரேலை லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எப்படி எதிர்க்கிறதோ, அதுபோல ஏமனைச் சேர்ந்த ஹூதி அமைப... மேலும் பார்க்க

'அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் துரதிஷ்டவசமானது...' - அமைச்சர் கோவி.செழியன் சொல்வதென்ன?

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அண்ணா பல்கலைக்கழகத... மேலும் பார்க்க