செய்திகள் :

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று(ஆக. 4) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(இரவு 7 மணி வரை) வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, பெரம்பலூர், தென்காசி, விருதுநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நீலகிரி, கோவைக்கு நாளை(ஆக. 5) ரெட் அலர்ட்!

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 28 districts, including Chennai, for the next 2 hours.

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாற்றப்பட்டுள்ளது.தவெக 2வது மாநில மாநாட்டுக்கான புதிய தேதியை அந்தக்... மேலும் பார்க்க

இரவில் சென்னை, 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்... மேலும் பார்க்க

கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம்! - கமலுக்கு பாஜக உறுப்பினர்கள் கண்டனம்

கல்வியே சநாதனத்தை முறிக்க வல்ல ஒரே ஆயுதம் என்ற கமல் ஹாசனின் பேச்சு மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. கமல் என்ன சொன்னார்?"சர்வாதிகாரச் சநாதனச் சங்கிலிகளை முறிக்க வல்ல ஒரே ஆயுதம் கல்வியே" என்று ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(எஸ்எஸ்சி) தேர்வு நடைமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்று மதுரை மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.கடந்த ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 1 ஆம் ... மேலும் பார்க்க

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

தமிழத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், • தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒ... மேலும் பார்க்க

மின் வாகனங்களில் 40% தமிழகத்தில் உற்பத்தி: முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்துதான் உற்பத்தியாகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில் வ... மேலும் பார்க்க