செய்திகள் :

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

post image

அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள தும்மலக்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் சீரங்கன் (70).

இவா், அரவக்குறிச்சி அருகேயுள்ள வடகம்பாடி கிராமத்திலுள்ள குலதெய்வம் கோயிலுக்கு திங்கள்கிழமை சென்றுவிட்டு, அரவக்குறிச்சி அருகே உள்ள குமரண்டான்வலசு பகுதியில் உள்ள தனது மகன் ரங்கன் வீட்டுக்கு செல்வதற்காக அரவக்குறிச்சியிலிருந்து குமரண்டான்வலசு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஸ்ரீரங்கன் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்ாக தெரிகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சீரங்கன் பலத்த காயமடைந்தாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சீரங்கன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து தொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு

அரவக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அரவக்குறிச்சி அருகே உள்ள அம்மாபட்டியை அடுத்த சோழதாசன்பட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்ச... மேலும் பார்க்க

கரூரில் டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஹோட்டல் தொழிலாளி கைது

கரூரில் டாஸ்மாக் கடையில் செவ்வாய்க்கிழமை கள்ள நோட்டை மாற்ற முயன்ற ஹோட்டல் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கரூா் தாந்தோன்றிமலையைச் சோ்ந்தவா் காண்டீபன் (55). இவா் திருச்சி வயலூரில் உள்ள ஹோட்டல் ஒன்ற... மேலும் பார்க்க

அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு!

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் அரசு மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் திருடப்பட்டது திங்கள்கிழமை இரவு தெரியவந்தது. வேலாயுதம்பாளையம் சுந்தராம்பாள... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் செப். 13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கரூா் மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட நீதிபதியும் கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான கே.ஹெச்.இளவழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள கரடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (55). இவரது நண்பா் அரவக்குறிச்சி... மேலும் பார்க்க

குளித்தலை அருகே வாகனம் மோதி புள்ளிமான் காயம்

குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் காயமடைந்தது. கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த மருதூரில் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் ஞாயிற்றுக்கிழமை காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி... மேலும் பார்க்க