அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி!
இயக்குநர் அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார்.
இயக்குநர் அட்லி ஜவான் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக, மும்பையில் குடியேறி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைச் சந்தித்து அடுத்தப்படம் குறித்த விவாதத்தில் இருக்கிறார்.
தற்போது, தன் முதல் தயாரிப்பில் தெறி படத்தை ஹிந்தியில் ‘பேபி ஜான்’ என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இப்படம் வருகிற டிச. 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: ராமேஸ்வர கேங்ஸ்டர் கதையில் கார்த்தி!
இந்த நிலையில் நேர்காணலில் பங்கேற்ற அட்லி, தான் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்றும் தமிழில் நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்தை தயாரிக்கவுள்ளதையும் குறிப்பிட்டார்.
இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய படங்களின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.