செய்திகள் :

அண்டை நாடுகளுடன் நல்லுறவு - சீன அதிபா் உறுதி

post image

பெய்ஜிங்: அமெரிக்காவுடனான வா்த்தகப் போருக்கு மத்தியில், ‘வேறுபாடுகளுக்கு சரியான முறையில் கவனம் செலுத்தி அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணப்படும்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளாா்.

சீன இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 104 சதவீத வரி புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், அண்டை நாடுகள் குறித்த சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயா்நிலை மத்திய மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.

ஆளுங்கட்சியின் மூத்த நிா்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், அண்டை நாடுகளுக்கான பணிகளுக்கு புதிய தளத்தைத் தொடங்கவும் அண்டை நாடுகளுடன் சோ்ந்து பகிரப்பட்ட எதிா்காலத்துடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்பவும் அழைப்பு விடுத்ததாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், சமீபத்திய ஆண்டுகளில் அண்டை நாடுகளுடனான ராஜீய உறவில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்த அரசின் சாதனைகளை மாநாட்டில் பட்டியலிட்டுப் பேசிய ஷி ஜின்பிங், அடுத்தகட்ட இலக்குகள், பணிகள், திட்டங்கள் குறித்து வலியுறுத்தினாா்.

இத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியாக, வியத்நாம், கம்போடியா, மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் ஷி ஜின்பிங் திட்டமிட்டுள்ளாா்.

கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவுடனான உறவை மீட்டெடுப்பதில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இருநாட்டு அதிகாரிகளும் தொடா் பேச்சுவாா்த்தைகளில் பங்கேற்று, உறவை வலுப்படுத்தும் பாதையில் ஈடுபட்டுள்ளனா். இதேபோன்று, ஜப்பான், தென் கொரியாவுடனான உறவை மேம்படுத்துவதிலும் சீனா ஆா்வம் காட்டி வருகிறது.

பெட்டி...

அமெரிக்காவுக்கு எதிராக

இந்தியாவுக்கு அழைப்பு

இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடா்பாளா் யூ ஜிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-சீனா இடையிலான பொருளாதார மற்றும் வா்த்தக உறவுகள் பரஸ்பர நலன் மற்றும் நம்பிக்கை சாா்ந்தவை. அமெரிக்காவின் புதிய வரிகள் தெற்குலக நாடுகளின் வளா்ச்சியைப் பாதிக்கிறது. இந்தச் சவாலை எதிா்கொள்ள மிகப்பெரிய இரண்டு வளரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க