செய்திகள் :

அண்டை நாடுகள் மீதான வரிகளை டிரம்ப் தாமதப்படுத்தியதால், மீண்ட பங்குச் சந்தைகள்!

post image

மும்பை: மெக்ஸிகோ மற்றும் கனடா நாட்டின் மீதான கூடுதல் வரி விதிப்பு கட்டணங்களை ஒரு மாதத்திற்கு பிறகு அமல்படுத்தப்படுமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து, சென்செக்ஸ் 1.81 சதவிகிதமும் மற்றும் நிஃப்டி இன்று கிட்டத்தட்ட 1.62 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,471.85 புள்ளிகள் உயர்ந்து 78,658.59 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்து 78,583.81 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 378.20 புள்ளிகள் உயர்ந்து 23,739.25 புள்ளிகளாக நிலைபெற்றதையடுத்து சந்தை மூலதனம் இன்று ரூ.5.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

30 பங்குகள் கொண்ட ப்ளூ-சிப் பேக்கிலிருந்து இன்று லார்சன் & டூப்ரோ கிட்டத்தட்ட 5 சதவிகிதம் உயர்ந்தது. அதானி போர்ட்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. அதே வேளையில் ஐடிசி ஹோட்டல்கள், சொமேட்டோ, நெஸ்லே, மாருதி உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தது.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகியவை கணிசமாக உயர்ந்தது. ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) சரிந்து முடிந்தது.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை நிஃப்டி 50-ல் இன்று 3 முதல் 6 சதவிகிதம் உயர்ந்தது. மறுபுறம் ட்ரெண்ட், பிரிட்டானியா, ஹீரோ மோட்டோகார்ப், நெஸ்லே மற்றும் டாடா கன்ஸ்யூமர் ஆகியவை 0.7 முதல் 6 சதவிகிதம் வரை சரிந்தது முடந்தது.

கோத்ரெஜ் பிராபர்டீஸ் 3 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்த நிலையில், கிளாண்ட் பார்மாவின் பங்குகள் டிசம்பர் மாதம் ஏமாற்றமளிக்கும் காலாண்டைத் தொடர்ந்து பங்குகள் 5 சதவிகிதம் வரை சரிந்தது முடிந்தது.

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) நிலுவைத் தொகை குறித்த முடிவை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நிதி செயலாளர் பாண்டே தெரிவித்ததையடுத்து வோடபோன் ஐடியா பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 12 சதவிகிதம் அதிகரித்து ரூ.271 கோடியாக இருப்பதாக நிறுவனம் அறிவித்ததை அடுத்து கேஸ்ட்ரால் இந்தியாவின் பங்குகள் 6 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

கஜாரியா செராமிக்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், 25 சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு சரிந்தையடுத்து 2025 ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் இது ரூ.77.7 கோடியாக சரிந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.104.2 கோடியாக இருந்தது.

இன்று 2,988 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,951 பங்குகள் உயர்ந்தும் 863 பங்குகள் சரிந்தும் 85 பங்குகள் மாற்றமின்றி முடிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.05 சதவிகிதம் சரிந்து பீப்பாய்க்கு 75.16 டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.3,958.37 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

இதையும் படிக்க: பழைய நகைகளுக்கு புத்துயிா் அளிக்கும் ஜிஆா்டி

ஃபெடரல் ரிசா்வ் முடிவுக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: ஃபெடரல் ரிசா்வ் முடிவுக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததாலும், தடையற்ற அந்நிய நிதி வெளியேற்றம் முதலீட்டாளர்களின் உணர்வை தொடர்ந்து பாதித்து வருவதாலும் பெஞ்ச்மார்க் குறியீடுகளான... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 201 புள்ளிகள் சரிவு!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(பிப். 18) காலை 75,795.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 9.30 மணியளவில், சென்செக்ஸ் 201.44 புள்ளிகள் குறைந்து 75,795.42 புள்ளிகளில் வர்த்தகமாகி வரு... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு! ரூ. 86.87

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய வணிக நேர முடிவில் 16 காசுகள் சரிந்து ரூ. 86.87 காசுகளாக நிறைவு பெற்றது. மேலும் பார்க்க

8 நாள்களுக்குப் பிறகு உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (பிப். 17) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்தது. மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை மீண்டும் உயர்ந்துள்ளது.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 63,920-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை அதிரடியாக... மேலும் பார்க்க

முன்பதிவு தொடக்க நாளில் 30,179 புக்கிங்கை பெற்ற மஹிந்திரா!

புதுதில்லி: மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 ஆகிய இரண்டு புதிய மின்சார மாடல்களுக்கு 30,179 முன்பதிவுகளை பெற்றது.நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, எக... மேலும் பார்க்க