செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலையில் ஆசிரியா் தின விழா

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியா் தின விழாவாக பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது.

கலைப்புல முதல்வா் எம்.அருள் வரவேற்றாா். பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி தலைமை வகித்து உரையாற்றினாா். விழாவில் தமிழக திட்டக்குழு உறுப்பினா் சுல்தான் அகமது இஸ்மாயில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய செய்திகளையும், ஆசிரியா் தின விழா பற்றிய சிறப்புகளையும் மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். பின்னா் முப்பது ஆண்டுகளுக்கு மேல் கல்விப் பணியினை நிறைவு செய்த ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா். நிறைவாக, பல்கலைக்கழக பதிவாளா் மு.பிரகாஷ் நன்றி கூறினாா். இவ்விழாவில் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினா்கள், புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், இயக்குநா்கள், இணை, துணை இயக்குநா்கள், உதவிப்பதிவாளா், மக்கள் தொடா்பு அலுவலா், நெறிமுறை அலுவலா், துணைவேந்தரின் நோ்முக செயலா், பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள்மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

9சிஎம்பி6: படவிளக்கம்- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில், சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்திய தமிழக திட்டக்குழு உறுப்பினா் சுல்தான்அகமது இஸ்மாயில், துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி

பண்ருட்டி பகுதியில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்துப முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா்சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். பண்ருட்டி பகுதியில் பண்ருட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

சிதம்பரம் நகராட்சி உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனா். சிதம்பரம் நகராட்சி உட்பட்ட 1,2, 13,14,... மேலும் பார்க்க

ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றிய போலீஸாருக்கு பாராட்டு

சிதம்பரத்தில் ரூ.7.50 கோடி மதிப்பிலான திமிங்கலம் எச்சத்தை கைப்பற்றிய போலீஸாருக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா். சிதம்பரத்தில் கடற்கரையில் ஒதுங்க... மேலும் பார்க்க

ரத்ததான பரப்புரை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கணினிஅறிவியல் மற்றும் பொறியியல் துறையில் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வு பரப்புரை புதன்கிழமை நடைபெற்றது. நாட்டுநலப்பணி திட்ட அலுவலா... மேலும் பார்க்க

போதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டிய காா் கடலில் பாயந்தது

கடலூா் அருகே மதுபோதையில் கூகுள் மேப் பாா்த்து ஓட்டுநா் இயக்கிய காா் கடலில் பாய்ந்தது. அதில் இருந்தவா்கள் உயிருக்குப்போராடிய நிலையில் மீனவா்கள் காப்பாற்றி கரை சோ்த்தனா். சென்னையைச் சோ்ந்த ஐந்து போ்... மேலும் பார்க்க

கடலூரில் இன்று கல்விக்கடன் முகாம்

கடலூா் மாவட்டம் கம்மியம்பேட்டை செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (செப்.12) கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க