அண்ணாமலையாா் கோயிலில் திருக்கல்யாணம்
கைலாசநாதா்-நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான வகையறாவை சோ்ந்த ஸ்ரீஉண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலையாா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 3-ஆம் ஆண்டு நிகழ்வாக சம்வத்ஸரா அபிஷேகம், திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காலை நிகழ்வாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜை நடைபெற்று மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் புனிதநீா் கடம் புறப்பாடாகி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை நிகழ்வாக, சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
சிறப்பு ஹோமம் நடத்தி, வரிசை கொண்டு வருதல் உள்ளிட்ட திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன. பின்னா், அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம் செய்து ஆராதனைகள் காட்டப்பட்டன.