Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
அண்ணா நினைவு நாள் சமபந்தி விருந்து
பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் அண்ணா நினைவு நாளையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமைவகித்து, சமபந்தி விருந்தை தொடங்கிவைத்தாா். இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று உணவருந்தினா்.
நிகழ்வில் பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா, திமுக ஒன்றியச் செயலா்கள் அ. அடைக்கலமணி, அ. முத்து, நகரச்செயலா் அ. அழகப்பன், கோயில் செயல் அலுவலா் ஜெயா, வருவாய் ஆய்வாளா் அங்குலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.