செய்திகள் :

அண்ணா பல்கலை. பாலியல் புகார்: காவல் துறை விளக்கம்!

post image

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் டிச. 23 (திங்கள்கிழமை) இரவு, இருவரும் கல்லூரி வளாகத்தில் தனியாக பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு அடையாளம் தெரியாத இருவர் வந்து, மாணவரைத் தாக்கிவிட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: அண்ணா பல்கலை.யில் பாலியல் புகார்: மாணவர்கள் போராட்டம் வாபஸ்!

இது தொடர்பாக காவல் துறை வெளியிட்ட விளக்கம்:

கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 -ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தனியாக ஒரு கட்டடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உள்படுத்தியதாகவும். கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை/ செய்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

புலன்விசாரணையின் போது. அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், (37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெருநகர சென்னை காவல் துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிக்கையாளர்கள் பலி!

காஸா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாலஸ்தீனப் பத்திரிக்கையாளர்கள் பலியாகினர்.கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாததிலிருந்து காஸா பகுதிகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து போர்தொடுத்து வருகின்றது. ... மேலும் பார்க்க

ஓடிடியில் அந்தகன்!

பிரசாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான அந்தகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியா... மேலும் பார்க்க

கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 446 ஆமைகள் மீட்பு!

தெலங்கானாவில் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 446 அரியவகை ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.ஆந்திராவிலிருந்து ஹைதராபாத்திற்கு அரிய வகை ஆமைகள் விற்பனைக்காகக் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் த... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் தி. அரப்பா காலமானார்!

சிவகங்கை: மதுரை மாவட்ட பத்திரிகையாளர் சங்க முன்னாள் நிர்வாகியும், புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பேரவையை தொடங்கி நடத்தி வந்தவருமான தி. அரப்பா(65) வியாழக்கிழமை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில... மேலும் பார்க்க

நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் நிலத்தகராறில் 45 வயது விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.அயோத்தி மாவட்டம் வண்டியா குருட் எனும் கிராமத்தைச் சேர்ந்த அஹில்கர் (வயது-45) எனும் விவசாயி, ந... மேலும் பார்க்க

துப்பாக்கி சூட்டில் 8 வயது சிறுமி படுகாயம்!

ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டில் தவறுதலாக குண்டு பாய்ந்ததில் 8 வயது சிறுமி படுகாயம்.கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த அனுஷ்கா (வயது-8) என்ற சிறுமியின் குடும்பத்தினர் இன்று (டிச.26) ... மேலும் பார்க்க