செய்திகள் :

`அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் தமிழக டிஜிபி-க்கு 3 உத்தரவுகள்' - தாமாக முன்வந்த தேசிய மகளிர் ஆணையம்

post image

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், பாதிக்கப்பட்ட மாணவியால் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் இணையத்தில் கசிந்தது. உடனடியாக இதை முடக்கிய காவல்துறை, சமூக வலைதளங்களில் இதைப் பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.

அண்ணா பல்கலைக்கழகம்

இவ்வாறிருக்க, பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் எஃப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்தில் கண்டங்களைத் தெரிவித்துவரும் அரசியல் கட்சிகள், குற்றவாளிக்கு கடும் தண்டனை அளிக்க வலியுறுத்திவருகிறது. தி.மு.க அரசின் மீதும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும், எஃப்.ஐ.ஆர் கசிவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக தமிழக டி.ஜி.பி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் தேசிய மகளிர் ஆணையம், ``சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 19 வயது மனைவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதைத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இந்தக் கொடூரமான செயலைக் கண்டிக்கிறது. மேலும், நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நிற்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர் என்று தேசிய மகளிர் ஆணையம் குறிப்பிடுகிறது. இவர் மீதான முந்தைய வழக்குகளில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இந்த அலட்சியமே அவரை மீண்டும் இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டியிருக்கிறது.

தேசிய மகளிர் ஆணையம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டவருக்கு இலவச மருத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும், இதில் கடுமையான தண்டனைக்கு BNS 2023-ன் பிரிவு 71-ஐ எஃப்.ஐ.ஆரில் சேர்க்கவும், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்காகவும், BNS 2023-ன் பிரிவு 72-ஐ மீறியதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக டி.ஜி.பி-க்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜய ரஹத்கர் உத்தரவிட்டிருக்கிறார்." என்று பதிவிட்டிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

Manmohan Singh : `வரலாறு உங்களிடம் மிகக் கனிவாக இருக்கும்' - சென்று வாருங்கள் மன்மோகன் சிங்

நவீன இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பிமன்மோகன் சிங்... இவர் அரசியல்வாதி அல்ல. ஆனால், இரண்டு முறைப் பிரதமராக இந்தியாவை வழி நடத்தியிருக்கிறார். தேர்தல் அரசியல் களத்தில் நின்று அவர் பதவிகளைத் தேடிப் போனதில... மேலும் பார்க்க

Manmohan Singh: கரடு முரடான பாதையை சீராக்கி, தொழில்துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் மன்மோகன் சிங்

ஜூன், 1991.இந்தியாவின் கஜானாவில் வெறும் 1 பில்லியன் டாலருக்கும் கீழே தான் அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது. அது என்ன வெறும் 1 பில்லியன் டாலர் என்று நினைக்காதீர்கள். கடந்த நவம்பர் மாத தரவுகளின் படி, ... மேலும் பார்க்க

Manmohan Singh: 6 வழிகளில் மீட்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் - மன்மோகன் சிங்கின் `1991’ ஃப்ளாஷ்பேக்

மன்மோகன் சிங்இந்திய பொருளாதாரத்தின் சிற்பிஇந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமரும், இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பி என்று அழைக்கப்படுபவருமான டாக்டர் மன்மோகன் சிங் தனது 92-வது வயதில் நேற்று காலமானார். மென... மேலும் பார்க்க

`ஞானசேகரன் மீது 20 வழக்குகள்; FIR லீக் ஆனது எப்படி?' - அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கமிஷனர் விளக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: `காவல்துறை மீது சந்தேகம்...' - கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில், குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததும், அவர்களின்... மேலும் பார்க்க