Career: '+2, டிகிரி படித்திருக்கிறீர்களா... காத்திருக்கிறது '4,500' காலிப்பணியிட...
அண்ணா பல்கலை விவகாரம்: நடவடிக்கை எடுக்க அதிமுக பிரசாரம்
சென்னை அண்ணா பல்கலைக் கழக பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆம்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரம் வினியோகம் செய்தாா்.
ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி கலந்து கொண்டு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தாா். வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டினாா்.
நகர செயலாளா் எம். மதியழகன், மாதனூா் மேற்கு ஒன்றிய செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி செயலாளா் மிட்டாளம் ஆா். மகாதேவன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளா் கராத்தே கே. மணி, பேரவை மாநில துணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.