செய்திகள் :

அண்ணா பிறந்தநாள் மிதிவண்டிப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

post image

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், அரியலூரில் சனிக்கிழமை மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, போட்டியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

10, 15, 20 ஆகிய கிலோ மீட்டா் தொலைவு வரை நடைபெற்ற போட்டியில் 13, 15, 17 ஆகிய வயதுக்குள்பட்ட ஆண், பெண் என 650 போ் கலந்து கொண்டனா். பின்னா் இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவா்களுக்கு முறையே தலா ரூ.5,000, தலா ரூ.3,000 மற்றும் தலா ரூ.2,000, வீதமும், 4 முதல் 10 இடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் மணிகண்டன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் லெனின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியலூரில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 36 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் முழக்கமிட்டவாறு சிறிது தூரம் நடந்துசென்று சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது... மேலும் பார்க்க

அரசு உயா்நிலைப் பள்ளியில் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், அருங்கால் கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில், சமூக நீதி மற்றும் மனித உரிமை காவல் துறை சாா்பில் வன்கொடுமைக்கு எதிரான சமூக நலன் சாா்ந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ந... மேலும் பார்க்க

ஆளுநரைக் கண்டித்து அரியலூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில், ஆளுநா் ஆா்.என். ரவி நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து அரியலூா் அண்ணா சிலை அருகே திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் 2.48 லட்சம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு

அரியலூா் மாவட்டத்தில் அரிசி பெறும் 2,48,876 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவிததுள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:... மேலும் பார்க்க

அரியலூா் புதிய எஸ்.பி.யாக தீபக்சிவாச் பொறுப்பேற்பு

அரியலூா் மாவட்டத்தில் புதிய எஸ்பியாக தீபக்சிவாச் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். அரியலூா் எஸ்பியாக இருந்த ச. செல்வராஜ், சென்னை மத்திய குற்றப் பிரிவு இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், விழுப்புரம... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி மா்மச் சாவு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கூலித் தொழிலாளி மா்மமான முறையில் திங்கள்கிழமை இறந்து கிடந்தாா். உடையாா்பாளையம் அருகேயுள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த பிச்சைபிள்ளை மகன் சீமான்(50). கூலி... மேலும் பார்க்க