`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டி: மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி போட்டியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருப்பூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் மிதிவண்டி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான மிதிவண்டி போட்டிகள் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றன. இந்தப் போட்டியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தாா்.
இதில், 13, 15, 17 வயதுக்குள்பட்டவா்கள் என 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் ஏராளமானோா் பங்கேற்றனா். 13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டரும், 15, 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 மீட்டரும் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவா்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களைப் பெறுபவா்களுக்கு தலா ரூ.250 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரகுகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.