காவிரி வடிநிலைப் பகுதியில் ஆறுகள், கால்வாய்கள் தூா்வாரப்படவில்லை - பி.ஆா். பாண்ட...
அதானி குழுமத்தின் 5 நிறுவன பங்குகள் கடும் சரிவு!
அதானி மீதான நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து, பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ், இந்திய நிறுவனத்தின் நிறுவனர் லஞ்ச குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை அதானி குழும நிறுவனங்களில் எந்த ஒரு முதலீடுகளையும் செய்ய போவதில்லை என்று கூறியதையடுத்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் 8% சரிந்தது.
கௌதம் அதானியின் வணிக சாம்ராஜ்யத்தில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒருவரான டோட்டல் எனர்ஜிஸ் குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனங்களின் பங்குகளின் ஒரு பகுதியை வைத்திருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 8.05% சரிந்து ரூ.967.65 ஆக நிலைபெற்றது. காலை நேர வர்த்தகத்தில் பங்கின் விலை 11% சரிந்து ரூ.932.90 ஐ எட்டியது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பங்குகள் 3.78% குறைந்து ரூ.624.85 ஆகவும், அதானி பவர் 3.02% குறைந்து ரூ.446.85 ஆகவும், பிஎஸ்இ-யில் என்டிடிவி பங்குகள் 2.07% குறைந்து ரூ.166.60 ஆகவும், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 1.43% குறைந்து ரூ.600.75 ஆகவும் இருந்தது.
இதையும் படிக்க: சோமேட்டோ பங்குகள் 4% உயர்வு!
இதற்கு நேர்மாறாக அதானி போர்ட்ஸ் பங்குகள் 2.55% உயர்ந்து ரூ.1,166.45 ஆகவும், ஏசிசி பங்குகள் 2.54% உயர்ந்து ரூ.2,142.85 ஆகவும், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 1.26% உயர்ந்து ரூ.2,257.65 ஆகவும், அதானி வில்மர் பங்குகள் 1.81% உயர்ந்து ரூ.297.60 ஆகவும், அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 0.88% பங்குகள் உயர்ந்து ரூ.505.10 ரூபாயாகவும் முடிந்தது.
பிரெஞ்சு நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் உடனான சூரிய மின்சார விநியோக ஒப்பந்தங்களைப், பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் கௌதம் அதானி மற்றும் இரண்டு நிர்வாகிகள் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், அதானி குழுமம் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்தும், அனைத்து சட்ட உதவிகளையும் நாடுவதாகவும் தெரிவித்துள்ளது.