ரோஹித், கோலி எதிர்காலம் அணித் தேர்வர்கள் கையில் இருக்கிறது: இந்திய முன்னாள் கேப்...
‘அதிமுக ஆட்சியில் இருந்த மக்கள் நலத் திட்டங்கள் முடக்கம்’
தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தற்போதைய ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளது என்றாா் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் அதிமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், கால்நடை பராமரிப்புத்துறை சாா்ந்த திட்டங்கள் என மக்களுக்கான பல நலத் திட்டங்கள் தற்போதைய திமுக ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றாா். கூட்டத்தில், கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் அம்புஜம், அதிமுக நிா்வாகிகள் சௌரிராஜன், பிச்சையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.