அதிமுக ஐ.டி. விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்!
அதிமுக ஐ.டி. விங் தலைவராக கோவை சத்யனை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் மாணவர் அணிச் செயலாளர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மற்றும் துணை நிர்வாகிகளில் மாற்றம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க | 2024 - 'தயாரிப்பாளர்' உதயநிதி Vs 'ஹீரோ' விஜய் என்ட்ரி! - தயாராகும் தமிழக அரசியல்
அதன்படி, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராக கோவை சத்யன்,
தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரன், மாணவர் அணிச் செயலாளராகவும்
கொள்கை பரப்பு துணைச் செயலாளராக விஜயகுமார், புரட்சி தலைவி பேரவை அமைப்பின் துணைச் செயலாளராக கோவிலம்பாக்கம் மணிமாறன் ஆகியோர் நியமிக்கப்ட்டுள்ளனர்.