முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை: 3 நாள்களுக்கு ஓய்வு தேவை - மருத்துவமனை அறிக்கை!
அதிமுக: "காலில் விழுகிறோம்; சேர்த்துக்கொள்ளுங்கள்" - இபிஎஸ்ஸிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கோரிக்கை
அதிமுக-வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் பலனில்லாமல் போய்விட்டன.
ஓ.பி.எஸ் ஆதரவாளர் பேசியது என்ன?
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளரான ரஞ்சித்குமார் நேரடியாகக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஞ்சித்குமார், "நாங்கள் எல்லாம் போராடியாச்சு. தமிழ்நாடு முழுவதும் போராடிப் பார்த்தாச்சு. எல்லோரையும் சந்திச்சாச்சு.
இப்போது உங்கள் காலிலேயே வந்து விழுகிறோம். சேர்த்துக்கொள்ளுங்கள்.
எங்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால், 2026-ம் ஆண்டு, மூன்று எழுத்து உள்ள கட்சிதான் ஆட்சி அமைக்கும்" என்று பேசியுள்ளார்.
என்ன பதில் வரலாம்?
இந்தக் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் இருந்து என்ன பதில் வரும் என்று தற்போது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னரே, எடப்பாடி பழனிசாமி, 'ஓ.பி.எஸ் தவிர யார் அதிமுகவிற்கு வந்தாலும், சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்' என்று கூறியிருந்தார்.
எல்லா ரூட்டிலும் முயற்சி செய்த பிறகு, எதுவும் கைகொடுக்காததால், நேரடியாக தற்போது எடப்பாடி பழனிசாமியிடமே சென்றுள்ளனர் ஓ.பி.எஸ் அணி.