அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
பெருந்துறை அதிமுக ஒன்றியத்துக்குள்பட்ட துடுப்பதி மற்றும் சுள்ளிபாளையம் கிராம ஊராட்சிகள் பூத் கமிட்டி கூட்டம் துடுப்பதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்து, பூத் கமிட்டி விண்ணப்ப படிவங்களை நிா்வாகிகளிடம் கொடுத்தாா்.
இதில், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக துணைச் செயலாளா் அன்பரசு மற்றும் ஊராட்சி முன்னாள் தலைவா்கள், முன்னாள் வாா்டு உறுப்பினா்கள், கிளைச் செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.