``நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேனா..?" - கனிமொழி உள்ளிட்டோரின் விமர்சனங்களுக்கு பவ...
``அதை செங்கோட்டையன் அவர்களிடம் சென்று கேளுங்கள்..! " - எடப்பாடி பழனிசாமி பதில்
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. சமீபமாகவே அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் பனிப்போர் நிலவி வருவதாக தகவல் வெளியானது.
செங்கோட்டையன் - எடப்பாடி!
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்ல திருமண விழாவில் கூட இருவரும் சந்திப்பதற்கான சூழல் இருந்தும், செங்கோட்டையன் அதை தவிர்த்தாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் இன்று சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, செங்கொட்டையன் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை தனியாக அவரின் அறையில் சந்தித்ததாக் தகவல் வெளியானது. ஆனால், அதற்கான சரியான காரணம் தெரியவில்லை.

இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``விவசாயிகளுக்கு எதிரான கட்சிதான் தி.மு.க. இவ்வளவுப் பெரிய பட்ஜெட்டில் எந்த சாதனைத் திட்டங்களும் இல்லை. இது வேளாண் பட்ஜெட் அல்ல. அவியல் கூட்டு மாதிரி இருக்கிறது.” என்றவரிடம் செங்கோட்டையன் சபாநாயகரை சந்தித்தது குறித்தும் அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்துக்கு வராதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ``தி.மு.க-வைப் போல நான் யாரையும் அடிமையாக வைத்திருக்கவில்லை. செங்கோட்டையன் என்னை ஏன் சந்திக்கவில்லை என அவரிடமே கேளுங்கள். நான் என்றும் யாரையும் எதிர்ப்பார்ப்பவன் அல்ல. நான் இந்தக் கட்சியில் தலைவன் கிடையாது. ஒரு தொண்டன் தான்.
தி.மு.க போல வாரிசு அரசியல் இங்கு இல்லை. இது சர்வாதிகார கட்சி கிடையாது. இங்கு எல்லோரும் சுதந்திரமாக செயல்படலாம். யார் எங்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம் யாரும் யாரையும் கேட்கமாட்டார்கள். எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க தான். மற்ற யாரும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது. எங்களுடன் இருக்கிற எல்லோரும் சுதந்திரமாக செயல்படுகிறார்கள்." என்றார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks