அந்நிய செலாவணி கையிருப்பு $640.479 ஆக உயர்வு!
மும்பை: பிப்ரவரி 21ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 4.758 பில்லியன் டாலர் அதிகரித்து 640.479 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 2.54 பில்லியன் டாலர் குறைந்து 635.721 பில்லியன் டாலர்களாக இருந்தது.
ரூபாயின் ஏற்ற இறக்கத்தைக் குறைக்க உதவும் வகையில், ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி சந்தை மறுமதிப்பீடு காரணமாக கடந்த பல வாரங்களாக கையிருப்பு குறைந்து வந்தது.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் அந்நிய செலாவணி மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 704.885 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.
பிப்ரவரி 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பு 4.251 பில்லியன் டாலர் அதிகரித்து 543.843 பில்லியன் டாலராக உயர்ந்தது.
தங்கத்தின் கையிருப்பு 42.6 கோடி டாலா் அதிகரித்து 7,457 கோடி டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ.87.46 ஆக முடிவு!