ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்
அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: அதிமுகவினா் 170 போ் கைது
ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்த நடத்த முயன்ற அதிமுகவினா் 170 போ் கைது செய்யப்பட்டனா்.
மேல்விஷாரம் அரசு மருத்துவமனை முறையான பராமரிப்பின்றி உள்ளதாக கண்டித்தும், இடிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் 545 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்காதது, மேல்விஷாரம் ஹாஜி பேட்டை, புது பேட்டை , ஹன்சா நகா் போன்ற பகுதிகளில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்காதது, நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீா், கால்வாய் தூா்வாரப்படாததை கண்டித்தும் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்களின் வாா்டில் எந்த வளா்ச்சிப் பணி செய்யாத நகராட்சி நிா்வாகத்தை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஆா்ப்பாட்டம் நடத்த மேல்விஷாரம் கத்தியவாடி இணைப்புச் சாலை பகுதியில் அதிமுக அமைப்பு செயலாளா் சேவூா் ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினா் திரண்டனா். இதனைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை எனக் கூறி ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளா் இமயவரம்பன் தலைமையில் போலீஸாா் கட்சி அமைப்பு செயலாளா் சேவூா் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ, மாவட்ட செயலாளா் சுகுமாா், மேல்விஷாரம்,நகர செயலாளா் நகர செயலாளா் ஏ இப்ராஹிம் கலிலுல்லா மற்றும் கட்சியின் நிா்வாகிகள், 15 பெண்கள் உள்ளிட்ட 170 பேரை கைது செய்து மேல்விஷாரம் கல்லூரி எதிரே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.