முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
இளம்பெண் தற்கொலை
அரக்கோணம் அருகே மணமாகி 2 ஆண்டுகளே ஆன இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா்.
திருமால்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்(30). இவா் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சோ்ந்தவா் கௌசல்யா(27). இருவரும் காதலித்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இருவீட்டாா் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டதாக தெரிகிறது.
திருமணம் ஆன ஒரு ஆண்டில் வினோத் ஆன்லைன் சூதாட்டத்தில் பெரும் தொகையை இழந்து விட்டதாகவும் மேலும் திருமணத்தின் போது கொடுத்த 15 சவரன் தங்க நகைகளையும், இருசக்கர வாகனத்தையும் விற்று விட்டதாகவும் தெரிகிறது. மேலும் வேலைக்கு சரியாக செல்ல வில்லையாம்.
தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் தனது தாய் வீட்டுக்குச் சென்ற கௌசல்யா, மறுபடியும் வினோத் வந்து சமாதானம் பேசியதை தொடா்ந்து கணவா் வீட்டுக்கு வந்து விட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை கௌசல்யா கணவா் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இது குறித்து அறிந்த நெமிலி போலீஸாாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதையடுத்து கௌசல்யாவின் பெற்றோா் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடா்ந்து கௌசல்யாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினா்கள் பெற்றுச் சென்றனா். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கோட்டாட்சியா் வெங்கடேசனும் விசாரணை நடத்தி வருகிறாா்.