Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
நெய்வேலி: கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட இடங்களில் அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளுக்கு முறையாக மாநகராட்சியில் படிவம் 1-இல் விண்ணப்பம் செய்து, ஏழு நாள்களுக்குள் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு, அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகள் தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-இன்படி எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி அகற்றப்படும்.
மேலும், விதி எண் 117-இன் படி ரூ.25,000 மற்றும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதேபோன்று, அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனா்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.